இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள நீலகிரி சோலைப் புறாவின் பொருத்தமான வாழ்விடத்தைக் காலநிலை மாற்றம் வெகுவாகக் குறைக்கக் கூடும் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
நீலகிரி சோலைப் புறா (கொலம்பா எல்ஃபின்ஸ்டோனி) மேற்குத் தொடர்ச்சி மலைகள் பல்லுயிர் மையத்தின் வட்டார இனமாகும்.
2021 மற்றும் 2040 ஆண்டுகளுக்கு இடையில் இதன் வாழ்விடம் சற்று அதிகரிக்கக் கூடும் ஆனால் 2081 மற்றும் 2100 ஆண்டுகளுக்கு இடையில் அது வெகுவாகக் குறையக் கூடும் என்று கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.
இந்த இனம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் "வான் தீவுகள் (உயரமானத் தீவுகள்)" என்று அழைக்கப்படும் உயரமான பசுமையான காடுகளில் வாழ்கிறது.
IUCN இதை தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாகப் பட்டியலிட்டுள்ளது ஆனால் நீண்ட கால காலநிலை மாற்றம் அதன் உயிர்வாழ்வைப் பாதிக்கலாம்.