TNPSC Thervupettagam

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு 2026

April 28 , 2026 2 days 97 0
  • நீலகிரி வரையாடு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளைக் கணக்கெடுக்கும் மூன்றாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, மேற்கொள்ளப்பட்டது.
  • மாநிலங்களுக்கு இடையே இடம்பெயரும் விலங்குகளை இருமுறை கணக்கிடுவதைத் தவிர்ப்பதற்காக, கேரள வனத்துறையுடன் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • இது கன்னியாகுமரி முதல் கூடலூர் வரையிலான 3,100 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவில் 14 வனக்கோட்டங்கள், 43 வனச்சரகங்கள், 124 வனப்பிரிவுகள் மற்றும் 177 கணக்கெடுப்புத் தொகுதிகளை உள்ளடக்கியது.
  • நிகழ்நேரத் தரவுச் சேகரிப்பு, GPS கண்காணிப்பு மற்றும் தரவறிக்கைக்காக “வருடை” என்ற அலைபேசி செயலி பயன்படுத்தப்பட்டது.
  • முந்தைய கணக்கெடுப்புகளில் 2024 ஆம் ஆண்டில் 1,031 நீலகிரி வரையாடுகளும், 2025 ஆம் ஆண்டில் 1,303 வரையாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது இவற்றின் எண்ணிக்கை உயர்வு மற்றும் வாழ்விட மறுசீரமைப்பைக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்