நுகர்வோர் நீதிமன்றங்களில் தலைமைப் பதவியினை வகிப்பதற்கான 20 ஆண்டுகள் என்ற கட்டாயத் தொழில்முறை அனுபவத்தினை உச்ச நீதிமன்றம் 10 ஆண்டுகளாகக் குறைத்துள்ளது.
உச்ச நீதிமன்றமானது அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் அதன் அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அறிவிப்பினை வெளியிட்டது.
இது விண்ணப்பதாரர்களின் செயல்திறனைச் சோதிப்பதற்காக எழுத்துத் தேர்வுகள் மற்றும் வாய்மொழித் தேர்வுகள் ஆகியவற்றை அறிமுகப் படுத்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு (நியமனத்திற்கான தகுதி, ஆட்சேர்ப்பு முறை, நியமன நடைமுறை, பதவிக் காலம், மாநில ஆணையம் மற்றும் மாவட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ராஜினாமா மற்றும் பதவி நீக்கம்) விதிகளில் பல திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு முன்மொழிந்து உள்ளது.