நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் உற்பத்தி செயல்முறையினால் ஏற்படும் முக்கிய மாசுபாட்டைச் சமாளிப்பதற்கான உலகளாவிய வழிகாட்டுதல்
September 21 , 2024 318 days 207 0
உலக சுகாதார அமைப்பானது, நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பல்வேறு உற்பத்திச் செயல்முறைகளில் இருந்து உருவாகும் மாசுபாடு குறித்த தனது முதல் உலகளாவிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் உற்பத்திக்கான கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மீதான மேலாண்மை குறித்த வழிகாட்டுதல் என்ற தலைப்பில் இந்த ஆவணம் வெளியிடப் பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அமைப்புகள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு மாசுபாட்டிற்கு எதிரான கட்டுப்பாடுகளை மிகவும் திறம்படச் செயல்படுத்துவதற்கான ஓர் அறிவியல் பூர்வ கட்டமைப்பை இந்த விரிவான ஆவணம் வழங்குகிறது.