TNPSC Thervupettagam

நுண்ணுயிர் எதிர்ப்பு உற்பத்தி செய்யும் வெப்ப நாட்ட பாக்டீரியாக்கள்

June 9 , 2025 19 hrs 0 min 26 0
  • வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (VIT) அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பீகார் மாநிலத்தின் நாளந்தாவில் உள்ள இராஜ்கிர் வெப்ப நீரூற்றை ஆய்வு செய்து வெப்ப நாட்ட ஆக்டினோபாக்டீரியாவைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த ஆக்டினோபாக்டீரியாக்கள் பல நோய்களை உண்டாக்கும் பல்வேறு நோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும் நுண்ணுயிர் எதிர்ப்புச் சேர்மங்களை மிக நன்கு உருவாக்குகின்றன.
  • வெப்ப நாட்டப் பாக்டீரியாக்கள் என்பவை சுமார் 45°C முதல் 70°C வரையிலான வெப்ப நிலையில் செழித்து வளரும் பாக்டீரியாக்கள் ஆகும்.
  • ஆக்டினோபாக்டீரியாக்கள் என்பது கிராம்-பாசிட்டிவ் பாக்டீரியாக்களின் ஒரு குழு ஆகும் என்பதோடு அவை ஸ்ட்ரெப்டோமைசின் மற்றும் டெட்ராசைக்ளின் போன்ற சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்றவை.
  • வெப்பத்தை விரும்பும் சில ஆக்டினோபாக்டீரியாக்கள், வெப்ப நீரூற்றுகள் போன்ற வெப்பமானச் சூழல்களில் உயிர் வாழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்