TNPSC Thervupettagam

நுண் திரவ DAP உரம்

March 15 , 2023 891 days 439 0
  • இந்தியாவில் நுண் திரவ DAP (டை-அம்மோனியம் பாஸ்பேட்) உரத்தினை அறிமுகப் படுத்துவதற்கு அரசாங்கம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • உரக் கட்டுப்பாட்டு ஆணையில் (FCO) இது குறித்து அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இது 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வெளியிடப் பட்டு உள்ளது.
  • இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு லிமிடெட் (IFFCO) நிறுவனமானது, 2021 ஆம் ஆண்டில் நுண் திரவ யூரியாவை அறிமுகப்படுத்தியது.
  • யூரியாவுக்கு அடுத்தபடியாக நாட்டில் அதிகம் நுகரப்படும் உரம் DAP ஆகும்.
  • 10-12.5 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்ட வருடாந்திர நுகர்வில், சுமார் 4-5 மில்லியன் டன்கள் உள்ளூர் உற்பத்தி மூலம் பெறப்படுகிற நிலையில், மீதமுள்ளவை இறக்குமதி செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்