நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம் – வடக்கு குயின்ஸ்லாந்து
December 24 , 2023 688 days 364 0
ஜாஸ்பர் என்ற வெப்பமண்டலப் புயல் ஆனது, ஆஸ்திரேலியாவின் தொலைதூர வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் இந்த நூற்றாண்டிலேயே இல்லாத மிகப்பெரிய வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு மழை அளவிகளில் வெறும் 12 மணி நேரத்தில் 660 மில்லிமீட்டர் (26 அங்குலம்) மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
இது 1972 ஆம் ஆண்டில் அந்த மாகாணத்தில் பதிவான 617 மி.மீ. என்ற முந்தைய மழைப் பொழிவின் அளவை விஞ்சியது.
மயோலாவில் உள்ள பாரோன் நதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்படாத ஒரு அளவிலான அதிகபட்ச வெள்ளம் ஏற்பட்டது.
டெய்ன்ட்ரீ நதியில், இதுவரையில் பதிவான அதிகபட்ச வெள்ளப்பெருக்கு அளவைத் தாண்டி வெள்ளம் ஏற்பட்டது.
இது 2019 ஆம் ஆண்டில் பதிவான சாதனை அளவான 12.6 மீட்டருக்கு மேலாக தற்போது 15 மீட்டர் என்ற மழைப்பொழிவு அளவை எட்டியுள்ளது.