TNPSC Thervupettagam

நெகிழிக் கழிவு சாலை தொழில்நுட்பம்

May 16 , 2026 16 days 50 0
  • CSIR-CRRI (மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம்) மற்றும் BPCL (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) ஆகியவை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றிலிருந்து அங்கீகாரம் பெற்றன.
  • பயன்படுத்த முடியாத நெகிழிக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப ஜியோசெல்களை பயன்படுத்தி முதல் சாலைத் தடுப்புப் பகுதியை அவை உருவாக்கின.
  • நிலையான சாலை உள்கட்டமைப்பு மற்றும் அறிவியல் பூர்வமான நெகிழிக் கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
  • இந்தத் தொழில்நுட்பம், கையாளுவதற்கு கடினமான நெகிழிக் கழிவுகளை நீடித்த சாலை கட்டுமானப் பொருட்களாக மாற்றி, வட்டாரப் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கிறது.
  • இந்தத் திட்டம் இந்தியாவில் சாலைப் பொறியியல் மற்றும் நிலையான உள் கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு வகையான கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்