மேற்கு ரயில்வே முதன்முறையாக மும்பை ராஜதானி விரைவு ரயிலில் பாலி எத்திலீன் டெரிப்தாலேட் புட்டிகளை நொறுக்கும் இயந்திரத்தை நிறுவியுள்ளது.
இந்த இயந்திரத்தால் ஒரு நாளைக்கு 3,000 புட்டிகளை நொறுக்க முடியும்.
இந்த இயந்திரம் இந்திய ரயில்வேயின் “தூய்மை பாரதம்” மற்றும் “பசுமை வழியில் செல்” ஆகிய திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த ரயிலில் நிறுவப் பட்டுள்ளது.
100 சதவீதம் மறுசுழற்சி செய்வதன் மூலம்கரிமத் தடங்களைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. மேலும் புட்டிக் கழிவுகளிலிருந்து ஏற்படும் குப்பைகளை நிலப் பரப்பில் கொட்டுவதையும் இதன் மூலம் தவிர்க்க முடியும்.
மும்பை ராஜதானி ரயிலானது மத்திய மும்பை மற்றும் புது தில்லி ஆகியவற்றிற்கு இடையே இயங்கும் அதிவேக விரைவு ரயில் ஆகும்.