இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து, நெல் மற்றும் கோதுமை ஆகியவற்றின் 15,000 குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மூலவுயிர் முதலுகளை அடையாளம் கண்டுள்ளனர்.
உணவு உற்பத்தி மீது பருவநிலை மாற்றத்தின் தீவிரமான தாக்கத்தினை தணிக்கச் செய்வதற்காக வெள்ளம், வறட்சி, அனல்காற்று மற்றும் நோய்களைத் தாங்கும் வகையிலான தாவர வகைகளை அடையாளம் கண்டுள்ளனர்.
டெல்லியிலுள்ள தேசியத் தாவர மரபணு வள வாரியத்தினால் இயக்கப்படும் மரபணு வங்கியிடமிருந்து நெல் மற்றும் கோதுமை மரபணு வளங்களை வேளாண் ஆராய்ச்சி. விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர்.