நெகிழ்வான பணவீக்க இலக்கு (FIT) கட்டமைப்பின் கீழ், 2026–2031 ஆம் ஆண்டிற்கான பணவீக்க இலக்கை அரசு அறிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட திருத்தத்தின் மூலம் இந்த FIT கட்டமைப்புக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப் பட்டது.
2026–2031 ஆம் ஆண்டு காலக் கட்டத்திற்கான பணவீக்க இலக்கு 4% (நுகர்வோர் விலை குறியீடு - CPI) ஆகத் தொடரும் என்ற நிலையில், இதன் சகிப்புத்தன்மை வரம்பு 2% முதல் 6% வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, 6 உறுப்பினர்களைக் கொண்ட பணவியல் கொள்கைக் குழு (MPC) மூலம் பணவீக்கத்தை நிர்வகிக்கிறது.
தொடர்ந்து 3 காலாண்டுகளுக்கு பணவீக்கம் 2%–6% வரம்பிற்கு வெளியே இருந்தால், அது கொள்கை தோல்வியாகக் கருதப்படும்.