தற்போதைய நெடுஞ்சாலை சுங்க முறை குறித்து பொதுக் கணக்குக் குழு (PAC) ஒரு சில சிக்கல்களை எழுப்பியுள்ளது.
சாலையின் தரம், போக்குவரத்து அளவு, அணுகல் தன்மை அல்லது திட்டத்தின் செலவினங்களை மீட்டெடுப்பது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், சுங்கங்கள் பெரும்பாலும் காலவரையின்றி வசூலிக்கப்படுகின்றன என்று அது கூறுகிறது.
கட்டண விதிகளில் 2008 ஆம் ஆண்டு திருத்தம் மூலம் நிரந்தரச் சுங்கம் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் இது சலுகை காலத்திற்கு அப்பாலும் சுங்கம் வசூலிக்க அனுமதிக்கும் 2023 ஆம் ஆண்டு திருத்தத்தின் மூலம் முறைப்படுத்தப்பட்டது.
நியாயமான மற்றும் வெளிப்படையான கட்டண நிர்ணயம், வசூல் மற்றும் ஒழுங்கு முறையை உறுதி செய்வதற்காக என விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (AERA) போன்ற ஒரு கட்டண ஆணையத்தை உருவாக்க PAC பரிந்துரை செய்தது.
நெடுஞ்சாலைகள் முழுமையடையாத இடங்களில் தானியங்கிக் கட்டணத் திரும்பப் பெறுதல் அல்லது தள்ளுபடிகளை PAC பரிந்துரைத்தது.
2023–24 ஆம் ஆண்டில் 55,882 கோடி ரூபாய், 2022–23 ஆம் ஆண்டில் 48,032 கோடி ரூபாய், 2021–22 ஆம் ஆண்டில் 33,929 கோடி ரூபாய் மற்றும் 2020–21 ஆம் ஆண்டில் 27,927 கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது 2024–25 ஆம் ஆண்டில் 61,408 கோடி ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலிக்கப் பட்டது.