நெல் கொள்முதல் செய்வதற்கான அனுமதிக்கப்பட்ட ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22% ஆக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பாதித்ததையடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதிக ஈரப்பத வரம்பிற்கான தமிழக அரசின் இதே போன்ற முந்தைய கோரிக்கைகள் கடந்த காலங்களில் மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப் பட்டன.
இந்தக் கோரிக்கைக்கு முன்னதாக அக்டோபர் மாத இறுதியில் மத்திய அரசின் குழுக்கள் தமிழகத்திற்கு வருகை தந்து நெல் மாதிரிகளை சேகரித்தன.
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசு கோரியது.