நேட்டோ உறுப்பினர் அந்தஸ்து - பின்லாந்து மற்றும் ஸ்வீடன்
May 26 , 2022 1085 days 456 0
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் இணைவதற்கு துருக்கியின் அதிபர் நாட்டின் எதிர்ப்பை அறிவித்தார்.
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் உறுப்பினர் நாடுகள், நார்வே, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் அனைத்தும் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகியவை ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளன.
ஐக்கியப் பேரரசு ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இந்த இடைநிலைக் காலத்தைச் சமாளிப்பதற்கு பாதுகாப்பு அளிப்பதாக உத்தரவாதங்களை வழங்கியுள்ளது.
இருப்பினும், அனைத்து வடக்கு அட்லாண்ட்டிக் ஒப்பந்த அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் ஆதரவு இல்லாமல், ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகியவை இராணுவக் கூட்டணியில் சேர முடியாது.