இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பானது (Indian Space Research Organisation - ISRO) “நேத்ரா” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
நேத்ரா (விண்வெளிப் பொருள் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான அமைப்பு) என்பது இந்திய செயற்கைக்கோள்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விண்வெளிக் கழிவுகள் மற்றும் பிற ஆபத்துக்களைக் கண்டறிவதற்காக விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு முன்னெச்சரிக்கை அமைப்பாகும்.
இது விண்வெளியின் சூழ்நிலை விழிப்புணர்வில் (space situational awareness - SSA) இந்தியாவுக்கு அதன் சொந்தத் திறனை வழங்குகின்றது.
நேத்ரா ஆனது 3,400 கி.மீ தொலைவு வரை, 10 செ.மீ என்ற சிறிய அளவிலான விண்வெளிக் கழிவுகளைக் கூட கண்டறிந்து அவற்றைக் கண்காணிக்கும். இதன் வரம்பெல்லையானது சுமார் 2,000 கி.மீ தூரமுள்ள விண்வெளிச் சுற்றுப்பாதைக்கு சமமாக இருக்கும்.
நேத்ரா பின்வருவனவற்றினால் ஆதரிக்கப்படுகின்றது
ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் அமைந்துள்ள பல்பொருள் கண்காணிப்பு ரேடார் (Multi-Object Tracking Radar - MOTR).
தமிழ்நாட்டில் உள்ள பொன்முடி மற்றும் ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபு ஆகிய இடங்களில் உள்ள தொலைநோக்கிகள்.
பாதுகாப்புப் பயன்பாடுகள்
பிற செயற்கைக் கோள்களின் சந்தேகத்திற்கிடமான சுற்றுவட்டப்பாதை மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கங்களைப் புரிந்து கொள்ளவும் அவை தங்கள் விண்கலத்தை உளவு பார்க்கிறதா அல்லது தீங்கு செய்கிறதா என்பதை அறியவும் SSA உதவும்.