நேரடித் தொடர்பற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள்
June 7 , 2022 1210 days 568 0
மகாராஷ்டிரா அரசானது முழுவதும் நேரடித் தொடர்பற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களைத் தொடங்கியுள்ளது.
அம்மாநிலத்தின் குடிமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நேரடியாகச் செல்ல வேண்டியதற்கான அவசியமின்றி, ஓட்டுநர் உரிமம் போன்ற பல வசதிகளைப் பெற உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது, மகாராஷ்டிராவின் போக்குவரத்துத் துறை 118 வகையான சேவைகளை வழங்குகிறது.
அவற்றில் 80 சேவைகள் இணைய வழியில் கிடைக்கப் பெறுவதோடு, மேலும் 6 சேவைகள் இந்தப் புதிய முன்னெடுப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.