TNPSC Thervupettagam

நேவாவின் செயலாக்கம்

July 24 , 2026 4 days 76 0
  • தேசிய மின்-விதான் செயலியை (நேவா) ஏற்றுக் கொள்வதற்கான தனது உறுதிப் பாட்டை மகாராஷ்டிர சட்டமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.
  • இது இந்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு திட்டப் பணியாகும்.
  • சட்டமன்றப் பணிகளை மேற்கொள்வதற்காக, அனைத்து 37 மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச சட்டமன்றங்களையும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் மூலம் டிஜிட்டல் மயமாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது “ஒரே தேசம், ஒரே செயலி” என்ற தொலைநோக்குப் பார்வையாகும்.
  • இது உறுப்பினர்கள் தங்கள் சட்டமன்றப் பொறுப்புகளை மிகவும் திறமையாக நிறைவேற்ற உதவுவதோடு, குடிமக்களுக்கு சட்டமன்றப் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை எளிதாக அணுகவும் வழிவகுக்கும்.
  • இவ்வாறு, இது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி, பொதுமக்களின் பங்கேற்பை வலுப்படுத்தி, டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட சட்டமன்றச் சூழலுக்குப் பங்களிக்கும்.
  • 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள், 21 சட்டமன்றங்கள் ஏற்கனவே முழுமையாக டிஜிட்டல் அவைகளாக மாறியுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்