புது தில்லியின் நவீன கலைக்கான தேசியக் கலைக்கூடமானது இணையவழியாக நைமிஷா 2020 எனும் ஒரு கோடைக்கால கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உள்ளது.
இது கலைஞர்களிடமிருந்துப் பங்கேற்பாளர்களுக்கும் கலை ஆர்வலர்களுக்கும் கலையை உருவாக்குவதற்கும் மற்றும் அதனைக் கற்றுக் கொள்வதற்கும் தேவையான வாய்ப்பை வழங்குவதற்கான ஒரு முயற்சியாகும்.
இந்த நிகழ்ச்சியிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைப் படைப்புகளின் ஒரு கண்காட்சி நவீன கலைக்கான தேசியக் கலைக்கூடத்தின் கலை ஊடகத் தளமான சோஹாமில் காட்சிப் படுத்தப்படும்.
நவீன கலைக்கான தேசியக் கலைக்கூடமானது 1954 ஆம் ஆண்டில் புது தில்லியின் ஜெய்ப்பூர் மாளிகையில் நிறுவப் பட்டது.
இது இந்திய அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு துணைநிலை அலுவலகமாக நடத்தப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது.