நொடிப்பு நிலை மற்றும் திவால் குறியீடு (திருத்தம்) மசோதா
August 6 , 2021 1470 days 634 0
பாராளுமன்றமானது சமீபத்தில் நொடிப்பு நிலை மற்றும் திவால் குறியீடு (திருத்தம்) மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 அன்று அறிவிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டு நொடிப்பு நிலை மற்றும் திவால் குறியீடு (திருத்தம்) என்ற ஒரு அவசரச் சட்டத்திற்கு மாற்றாக அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது.
இந்த சமீபத்திய திருத்தமானது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஒரு மாற்றுவகை நொடிப்பு நிலைத் தீர்வு முறையை வழங்கும்.
இந்தத் தீர்வு முறையானது முன்பே தொகுத்தமைக்கப்பட்ட தொகுப்பு நிலைத் தீர்வு முறை என்று அழைக்கப்படும்.
மேலும் பெருநிறுவனக் கடனாளிகளின் நொடிப்பு நிலைச் சிக்கல்களை 330 நாட்களுக்குள் தீர்ப்பதற்காக வேண்டி ஒரு காலவரையறை நிர்ணயிக்கப்பட்ட செயல் முறையை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தத் தீர்வு முறையானது பெரு நிறுவன நொடிப்புநிலைத் தீர்வுச் செயல்முறை எனப்படும்.
இந்த முறையின் கீழ், ரூ. 1 லட்சம் அளவிலான நொடிப்பு நிலையாக இருந்தால் கடனாளிகள் அல்லது கடன் வழங்குநர்கள் பெருநிறுவன நொடிப்பு நிலைத் தீர்வு செயல்முறையைத் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
பெருநிறுவன நொடிப்பு நிலைத் தீர்வு செயல்முறையின் கீழ் நொடிப்பு நிலைத் தீர்வு குறித்து முடிவு செய்வதற்கு ஒரு கடன் வழங்குநர் குழுவும் அமைக்கப்படும்.