நோய்க் கண்காணிப்புச் செயல்முறைக்கான நுண் உணர்விகள்
April 16 , 2024 450 days 412 0
ஜோத்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது மதுபானம் அருந்தி இருப்பதைக் கண்டறிதல் மற்றும் சுகாதாரக் கண்காணிப்பு ஆகியவற்றிற்காக என்று வடிவமைக்கப் பட்ட மனித சுவாச உணரவிகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த உணர்விகள் உலோக ஆக்சைடுகள் மற்றும் நுண்ணிய சிலிகான் ஆகியவற்றினைப் பயன்படுத்துகிறது என்ற நிலையில் பல்வேறுப் பயன்பாடுகளுக்கு செலவு குறைந்த மற்றும் அறுவை சிகிச்சை சாராத தீர்வை வழங்குகின்றன.
இந்த உணர்விகளின் முதன்மை செயல்பாடு ஆனது குடிபோதையில் வாகனம் ஓட்டும் போது சுவாசத்தில் ஆல்கஹால் கலப்பினை அளவிடுவதாகும்.
ஆனால் இந்த சாதனம் ஆனது ஆஸ்துமா, நீரிழிவு சார் கீட்டோ அசிடோசிஸ், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், தூக்கத்தில் மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களை வகைப்படுத்தும் திறனையும் கொண்டுள்ளது.