TNPSC Thervupettagam

நோர்டு ஸ்டிரீம் 2 குழாய் இணைப்பு

February 26 , 2022 1273 days 572 0
  • இது ரஷ்யாவிலுள்ள உஸ்த்-லூகாவிலிருந்து பால்டிக் கடல் வழியாக ஜெர்மனியிலுள்ள கிரீஃப்ஸ்வால்ட் பகுதி வரை செல்லும் 1,200 கி.மீ. நீளம் கொண்ட ஒரு குழாய் இணைப்பு ஆகும்.
  • இது ஆண்டுக்கு 55 பில்லியன் கன மீட்டர் வாயுவினை எடுத்துச் செல்லுகிறது.
  • இந்தக் குழாய் இணைப்பை நிறுவுவதற்கான ஒரு முடிவானது 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டது.
  • நோர்டு ஸ்டிரீம் 1 அமைப்பின் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்தது.
  • நோர்டு ஸ்டீரிம் 2 அமைப்புடன் சேர்த்து இந்த அமைப்பு 110 பில்லியன் கன மீட்டர் வாயுவினை ஜெர்மனி நாட்டிற்குக் கொண்டுச் செல்லும்.
  • கிழக்கு உக்ரைனின் பிரிவினைவாதக் குடியரசுகளான டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகியவற்றின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதாக ரஷ்யா அறிவித்ததை டுத்து, நோர்டு ஸ்டிரீம் 2 வாயு குழாய் இணைப்புத் திட்டத்திற்கு அனுமதி வழங்கும் செயல்முறையை நிறுத்த ஜெர்மனி நடிவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்