TNPSC Thervupettagam

பக்கிங்ஹாம் கால்வாய் மறுசீரமைப்பு

August 28 , 2026 16 days 107 0
  • பக்கிங்ஹாம் கால்வாயின் மையப்பகுதியில் உள்ள 7.2 கி.மீ தொலைவை மீண்டும் நீர்வழிப் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றுவதற்கான ₹876.35 கோடி மதிப்பிலான திட்டத்தை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருகிறது.
  • பக்கிங்ஹாம் கால்வாய் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் சுமார் 450 கி.மீ நீளத்திற்கு பாய்கிறது; இதில் ஆந்திரப் பிரதேசத்தில் 250 கி.மீ மற்றும் தமிழ்நாட்டில் 200 கி.மீ அடங்கும்.
  • இது முதலில் 1806 ஆம் ஆண்டில் பசில் கோக்ரேன் என்பவரால் கட்டப்பட்டது மற்றும் ஆரம்பத்தில் கோக்ரேன் கால்வாய் என்று அழைக்கப்பட்டது.
  • 1878 ஆம் ஆண்டில் அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான பக்கிங்ஹாம் மற்றும் சந்தோஸ் கோமகனின் பெயரால் பக்கிங்ஹாம் கால்வாய் என மறுபெயரிடப்பட்டது.
  • முன்மொழியப்பட்ட நீர்வழிப் போக்குவரத்துப் பகுதி நேப்பியர் பாலத்தில் இருந்து கிரீன்வேஸ் சாலை வழியாக அடையாறு ஆறு வரை செல்லும், இதில் பயணிகள் படகுகள், மிதக்கும் உணவகங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவை முன் மொழியப் பட்டுள்ளன.
  • வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் (316 கி.மீ) மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் (110 கி.மீ) ஆகியவை 2016 ஆம் ஆண்டில் தேசிய நீர்வழிப் பாதை 4-இன் பகுதிகளாக அறிவிக்கப் பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்