பங்குகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரி
December 16 , 2018 2405 days 684 0
மேகாலயா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியான தருண் அகர்வாலா, மும்பையில் உள்ள பங்குகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அல்லது 70 வயதினை எட்டும் வரை இந்தப் பதவியில் இருப்பார்.
பங்குகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்
பங்குகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமானது ஒரு சட்டப் பூர்வமான அமைப்பாகும்.
இது 1992 ஆம் ஆண்டு செபி (Securities and Exchange Board of India - SEBI) எனப்படும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியச் சட்டம் 1992-ன் பிரிவு 15K-ன் கீழ் நிறுவப்பட்டது.
இந்த தீர்ப்பாயமானது அச்சட்டத்தின் கீழ் விசாரணைகளையும் செபி அல்லது விசாரணை அதிகாரியால் வழங்கப்பட்ட உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகள் மீதான தீர்ப்புகள் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ளும்.