ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் பருவநிலை மாற்றச் சேவையானது, பசிபிக் பெருங்கடலின் நினோ 3.4 பிராந்தியத்தில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 29.70°C ஐ எட்டியதாகப் பதிவு செய்துள்ளது.
இந்த வெப்பநிலையானது 1982-83, 1997-98 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வலுவான எல் நினோ நிகழ்வுகளின் போது பதிவான உச்ச அளவுகளைத் தாண்டியது.
எல் நினோ என்பது ஒரு இயற்கையான பருவநிலை வடிவமாகும், இது மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலை வெப்பமாக்கி, உலகளாவிய மழைப் பொழிவு மற்றும் வானிலை அமைப்புகளை மாற்றுகிறது.
இது வறட்சி, வெள்ளம், அதிக வெப்பம் மற்றும் பயிர் இழப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.
உலகளாவிய சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை செப்டம்பர் மாதத்தில் 21.05°C என்ற உச்சத்தை எட்டியது, அதே நேரத்தில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமானது உலகில் இதுவரை பதிவான இரண்டாவது வெப்பமான செப்டம்பர் மாதமாகும்.
தற்போதைய எல் நினோ விதிவிலக்காக வலுவானது, ஆனால் இதுவரை பதிவு செய்யப் பட்டவற்றிலேயே மிக வலிமையானது என்று இன்னும் உறுதிப்படுத்தப் பட வில்லை என கோப்பர்நிக்கஸ் தெரிவித்துள்ளது.