மேற்கத்திய நட்பு கூட்டணி நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவை இணைந்து பசிபிக் பெருங்கடலில் ஒரு கடலடிக் கம்பிவடத்தினை அமைப்பதற்கு வேண்டி கூட்டாக இணைந்து நிதியளிப்பதாக அறிவித்துள்ளன.
மேற்கத்திய நட்பு கூட்டணி நாடுகள், இந்தப் பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் தாக்கத்தை எதிர்க்க எண்ணுவதனால் 3 சிறிய பசிபிக் நாடுகளில் இணைய வசதியை அதிகரிக்க வேண்டி பசிபிக் பெருங்கடலில் அமைக்கப்படும் இந்தக் கடலடி கம்பி வடங்கள் பயன்படுத்தப் படும்.
அந்த மேற்கத்திய நட்பு நாடுகள் கிரிபாட்டி, நவ்ரூ மற்றும் மைக்ரோனேசியாவின் கூட்டாட்சி அரசுகள் ஆகியவற்றிற்கு விரைவான இணையச் சேவையினை வழங்கச் செய்வதற்காக கடலடிக் கம்பி வடத்தினை உருவாக்க உள்ளன.