பசி எனும் வைரசின் பெருக்கம் குறித்த அறிக்கை – ஆக்ஸ்ஃபாம்
July 12 , 2021 1588 days 670 0
முரண்பாடு, கோவிட்-19 மற்றும் பருவநிலை நெருக்கடி (3C’s : Conflict, Covid-19 & Climate Crisis) ஆகிய மூன்று காரணங்களால் ஒவ்வொரு நிமிடமும் 11 பேர் தீவிரப் பசி மற்றும் பட்டினிக்குப் பலியாகின்றனர் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பசியால் ஏற்படும் இறப்பு வீதமானது ஒரு நிமிடத்திற்கு 7 பேர் என்ற வீதத்திலுள்ள கோவிட்-19 பெருந்தொற்றின் இறப்பு வீதத்தை விஞ்சியுள்ளது.
உலகெங்கிலும் 155 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்மை (அ) மோசமான உணவு நிலை போன்ற நெருக்கடி நிலைகளில் வாழ்கின்றனர் என்று இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 20 மில்லியன் வரை உயர்ந்துள்ளது.
155 மில்லியன் மக்களில் மூன்றில் இரு பங்கினர் தங்களது நாடு இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக பசி மற்றும் பட்டினி நிலையை எதிர்கொள்கின்றனர்.