பசுக்களுக்கான TANUVAS கிராண்ட் ஊட்டச்சத்து துணை நிறைவு
April 13 , 2025 184 days 210 0
தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் (TNIAMP) ஆனது சுமார் 19,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்த ஊட்டச்சத்து குறித்தத் துணை நிறைவு பொருட்களை இலவசமாக வழங்கியுள்ளது.
TANUVAS கிராண்ட், கால்நடைகளிலிருந்து வெளியேறும் மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைத்து அவற்றின் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
இது பசுவின் வயிற்றில் நுண்ணுயிரிகள் வளர உதவுவதன் மூலம் ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 25-30 லிட்டர் மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைக்கிறது.
இதன் விளைவாக, பால் உற்பத்தி மற்றும் சாணம் உற்பத்தியில் அதிகரிப்புப் பதிவாகி உள்ளது.