TNPSC Thervupettagam

பசுமைக் குளிரூட்டி தொழில்நுட்பம் - CSIR-IICT

July 16 , 2026 12 days 90 0
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை – இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் (CSIR-IICT) இணைந்து, அடுத்த தலைமுறை பசுமைக் குளிரூட்டியான ஹைட்ரோபுளூரோஒலிஃபின்களை (HFOs) தயாரிப்பதற்கான இந்தியாவின் முதலாவது உள்நாட்டு செயல்முறை தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
  • குளிரூட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாகனக் குளிரூட்டும் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஹைட்ரோபுளூரோகார்பன்களுக்கு (HFCs) மாற்றாக ஹைட்ரோ புளூரோ ஒலிஃபின்கள் (HFOs) வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • இத்தொழில்நுட்பம் பூஜ்ஜிய ஓசோன் சிதைவுத் திறன் (ODP), குறைந்த புவி வெப்ப மயமாதல் திறன் (GWP) மற்றும் மிகக் குறுகிய வளிமண்டல ஆயுட்காலம் கொண்ட HFO-1234yf ஐ உற்பத்தி செய்கிறது.
  • இந்த உள்நாட்டு செயல்முறை தொழில்துறையினருக்கு தொழில்நுட்பப் பரிமாற்றம் செய்ய தயாராக உள்ளது, இது இறக்குமதி செய்யப்படும் குளிரூட்டி தொழில் நுட்பத்தின் மீதான சார்பைக் குறைக்கும்.
  • கிகாலி திருத்தத்தின் கீழ், இந்தியா 2032 முதல் 2047 ஆம் ஆண்டு வரையிலான நான்கு கட்டங்களில் ஹைட்ரோபுளூரோகார்பன்களின் (HFCs) பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்