பசுமையை நோக்கிச் செல்லுங்கள் பிரச்சாரம் – ஆந்திரப் பிரதேசம்
November 6 , 2020 1754 days 705 0
“பசுமையை நோக்கிச் செல்லுங்கள்” (Go Electric Campaign) பிரச்சாரமானது ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் எரிசக்தி பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்து எரிசக்தி திறன் பணியகத்தால் தொடங்கப் பட்டுள்ளது.
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக வேண்டி மாநிலம் முழுவதும் 400 மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களை ஆந்திரப் பிரதேச அரசானது அமைக்க உள்ளது.
எரிசக்தி திறன் பணியகத்தின் “பசுமையை நோக்கிச் செல்லுங்கள்” பிரச்சாரத்துடன் ஒருங்கிணைந்து இது அடையப்பட இருக்கின்றது.
மின்னேற்ற நிலையங்கள் மற்றும் மின்சார வாகன உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை அமைப்பதன் மூலம் மின்சார வாகனத் துறையில் முதலீட்டை ஈர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.