TNPSC Thervupettagam

பசுமை அம்மோனியா கொள்கை

February 21 , 2022 1247 days 1552 0
  • எரிசக்தி அமைச்சகமானது பசுமை ஹைட்ரஜன்/பசுமை அம்மோனியா என்ற ஒரு கொள்கையை அறிவித்துள்ளது.
  • இந்தக் கொள்கையானது பசுமை ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா ஆகியவை எதிர்காலத்தில் புதைபடிவ எரிபொருட்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படவுள்ள ஒரு எரிபொருளாகக் கருதப் படுகின்றன.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பெறப்படும் ஒரு எரிசக்தியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் எரிபொருட்கள் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா என்று அழைக்கப்படுகிறது.
  • பசுமை ஹைட்ரஜன் நீரின் மின்னாற்பகுப்பால் (water electrolysis) உருவாக்கப்படுகிறது.
  • இது தண்ணீரை ஹைட்ரஜனாகவும் ஆக்ஸிஜனாகவும் பிரிக்கும் ஒரு நுட்பமாகும்.
  • அம்மோனியா என்பது விவசாய உரங்களில் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு வாயு ஆகும்.
  • நீர் மின்னாற்பகுப்பிலிருந்துப் பெறப்படும் ஹைட்ரஜனையும் காற்றிலிருந்து பெறப் படும் நைட்ரஜனையும் பயன்படுத்தி பசுமை அம்மோனியா தயாரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்