TNPSC Thervupettagam

பசுமை ஆற்றலைத் தூண்டக் கூடிய பொருள்

July 8 , 2025 5 days 36 0
  • மீமின்தேக்கிகளை மேம்படுத்துவதற்காக என இந்திய அறிவியலாளர்கள் லாந்தனம் சேர்க்கப் பட்ட வெள்ளி நியோபேட் எனும் கூறினை உருவாக்கியுள்ளனர்.
  • மீமின்தேக்கிகள் ஆற்றலைச் சேமித்து விரைவாக வெளியிடும் சாதனங்கள் ஆகும்.
  • லாந்தனம் என்பது மின்னியப் பண்புகளை மேம்படுத்தும் ஓர் அருமண் தனிமம் ஆகும்.
  • லாந்தனத்துடன் இணைப்பது வெள்ளி நியோபேட் துகள்களைச் சுருக்கி, மேற்பரப்புப் பகுதியை அதிகரிக்கிறது.
  • இது ஆற்றல் சேமிப்பு மற்றும் மின் கடத்துத்திறனை மேம்படுத்துகிறது.
  • பல பயன்பாடுகளுக்குப் பிறகும் புதிய பொருள் ஆனது 118% ஆற்றல் திறனைத் தக்க வைத்துக் கொள்கிறது.
  • இது கிட்டத்தட்ட எந்த ஆற்றல் இழப்பும் இல்லாமல் 100% கூலம்பிக் செயல்திறனை அடைகிறது.
  • நிஜ உலகப் பயன்பாட்டை விளக்கி காட்டுவதற்கு ஒரு முன்மாதிரி மூலமாக LCD (திரவ படிக திரை) திரை இயக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்