பசுமை இந்தியா என்ற திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கான உறுதிப்பாட்டு அறிக்கை
November 24 , 2021 1394 days 617 0
இந்திய ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டது.
நிதி அமைப்பினைப் பசுமை மயமாக்குவதற்கான ஒரு கட்டமைப்பிற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஆதரவளிப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று நிதி அமைப்பினைப் பசுமை மயமாக்குவதற்கான கட்டமைப்பில் (Network for Greening the Financial System – NGFS) உறுப்பினராக இணைந்தது.
NGFS (Network for Greening the Financial System) என்பது 83 மத்திய வங்கிகள் மற்றும் நிதி கண்காணிப்பு அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பாகும்.
நிதி அமைப்பினைப் பசுமை மயமாக்குவதை துரிதப்படுத்துவதையே இந்தக் கட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்பாக மத்திய வங்கிகள் ஆற்ற வேண்டிய பங்குகள் குறித்த பரிந்துரைகளை உருவாக்கவும் இது விழைகிறது.
இதன் செயலகமானது பாங்க் டி பிரான்ஸ் என்ற வங்கியினால் செயல்படுத்தப் படுகிறது.
டச்சு சென்ட்ரல் பேங்கர் எல்டர்சன் என்பது தான் NGFS கட்டமைப்பின் தற்போதையத் தலைமை ஆகும்.
NGFS ஆனது 2017 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடைபெற்ற ‘ஒற்றைக் கோள் உச்சி மாநாட்டில்’ அறிவிக்கப் பட்டது.