பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) ஆகியவை ஆந்திரப் பிரதேசத்தின் இராமாயப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகில் ஒரு பசுமை சார் (எந்தவித மேம்பாட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலத்தில்) சுத்திகரிப்பு நிலையத்திற்கான ஒத்துழைப்பு குறித்து ஆராய்வதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1 லட்சம் கோடி முதலீட்டில் அமைக்கப்பட முன்மொழியப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெட்ரோ வேதியியல் வளாகம் ஆனது 9–12 மில்லியன் டன் கொள்ளளவில் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.
இராமாயப்பட்டினம் மையத்தில் தென்னிந்தியாவில் முதல் முறையாக, ஆண்டிற்கு 1.5 மில்லியன் டன் (MTPA) அளவிலான திறன் கொண்ட, 35% பெட்ரோ வேதியிய செறிவுடன் கூடிய எத்திலீன் உடைப்பு அலகு உள்ளது.
2030 ஆம் நிதியாண்டில் இதன் வணிக நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகின்றன என்பதோடுமேலும் இந்த மையம் எரிசக்தி பாதுகாப்பு, தொழில்துறை மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.