TNPSC Thervupettagam

பசுமை மாற்றம் குறித்த நிதி ஆயோக் அறிக்கை

January 26 , 2026 14 hrs 0 min 20 0
  • சிமெண்ட், அலுமினியம் மற்றும் MSME துறைகளுக்கான கார்பன் நீக்கம் செய்வதற்கான வழித்தடங்களை கோடிட்டுக் காட்டும் அறிக்கைகளை நிதி ஆயோக் வெளியிட்டது.
  • பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைப்பது அல்லது நீக்குவதை கார்பன் நீக்கம் குறிக்கிறது.
  • இந்தியாவின் மொத்தப் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் சிமெண்ட் சுமார் 6% மற்றும் அலுமினியம் சுமார் 2.8% பங்களிக்கிறது.
  • 2022 ஆம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் (MSME) சுமார் 135 மில்லியன் டன் அளவிற்குக் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமான அளவை வெளியிடுகின்றன.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உமிழ்வுத் தீவிரத்தை 45% குறைத்து 2070 ஆம் ஆண்டுக்குள் நிகர சுழி உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் இலக்குகளை இந்த மாற்றம் ஆதரிக்கிறது.
  • ஐரோப்பிய ஒன்றிய கார்பன் வரம்பு சீரமைப்பு செயல்முறை போன்ற வர்த்தக நடவடிக்கைகளால் எழும் ஏற்றுமதி அபாயங்களைக் குறைக்கவும் இது உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்