GMR ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தினால் இயக்கப்படும் டெல்லி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு சர்வதேச விமான நிலையங்கள் மன்றத்தினுடைய (Airports Council International – ACI) 2021 ஆம் ஆண்டிற்கான பசுமை விமான நிலையங்கள் எனும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையங்கள் மேற்கொண்ட நிலையான சுற்றுச்சூழல் சார்ந்த முன்னெடுப்புகளுக்காக இந்த அங்கீகாரமானது வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு ‘ஆண்டுக்கு 25 பில்லியன் பயணிகளுக்கு மேல் எனும்’ பிரிவில் பிளாட்டின அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு ‘ஆண்டுக்கு 25 மில்லியன் பயணிகளுக்கு கீழ்’ எனும் பிரிவில் தங்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம்,
வான்வழிப் போக்குவரத்தினால் சுற்றுச்சூழல் மீது ஏற்படும் தாக்கத்தை குறைப்பதற்காக வேண்டி சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறப்பான நடைமுறைகளை மேம்படுத்துவது,
சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களில் சிறப்பாக செயலாற்றிய விமான நிலையப் பணியாளர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது போன்றவையாகும்.
ACI அமைப்பின் 2021 ஆம் ஆண்டு பசுமை விமான நிலையங்கள் அங்கீகாரத் திட்டத்தின் கருத்துரு, ‘காற்றுத் தர மேலாண்மை’ (Air Quality Management) என்பதாகும்.