TNPSC Thervupettagam

பசுமை ஹைட்ரஜன் பள்ளத்தாக்குப் பிரகடனம் 2025

July 26 , 2025 12 hrs 0 min 22 0
  • ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பசுமை ஹைட்ரஜன் பள்ளத்தாக்குப் பிரகடனத்தை வெளியிட்டார்.
  • பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டிற்கான இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு விரிவான செயல் திட்டத்தினை இது குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • இந்தியாவின் பசுமைப் பொருளாதார மாற்றத்தில் ஆந்திரப் பிரதேசத்தை ஒரு முக்கிய மையமாக மாற்றுவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.
  • இந்தியாவின் ஓர் உள்நாட்டு விநியோகச் சங்கிலியை உருவாக்குவதே இந்த அறிவிப்பின் ஒரு மையக் கருவாகும்.
  • இது 2030 ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்படும் மின்னாற்பகுப்புக் கூறுகள் மற்றும் சேமிப்புத் தீர்வுகளில் 60% அளவைக் கொண்டிருக்கும்.
  • பசுமை ஹைட்ரஜன் பள்ளத்தாக்கு இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்தப் பசுமை ஹைட்ரஜன் திறன் சுற்றுச்சூழல் அமைப்பையும் கொண்டிருக்கும்.
  • 2029 ஆம் ஆண்டிற்குள் 5 ஜிகாவாட் (GW) திறன் கொண்ட மின்னாற்பகுப்பு உற்பத்தித் திறனை உருவாக்குவதே இதன் முக்கிய இலக்காகும்.
  • புதுப்பிக்கத்தக்க மின்சார ஆற்றலைப் பயன்படுத்தி தண்ணீரைப் பிரித்து பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கு மின்னாற்பகுப்பு கருவிகள் அவசியம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்