புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது, மூன்று முக்கிய இந்தியத் துறைமுகங்களை பசுமை ஹைட்ரஜன் மையங்களாக அங்கீகரித்துள்ளது.
குஜராத்தில் உள்ள தீன்தயாள் துறைமுகம், தமிழ்நாட்டில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மற்றும் ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகம் ஆகியவை இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.
இந்த அங்கீகாரமானது தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தத் திட்டமானது, இந்தியாவில் ஒருங்கிணைந்த ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2070 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் தூய்மையான ஆற்றலுக்கான மாற்றத்தை முன்னேற்றுவதும் நிகர சுழி உமிழ்வு நிலையை அடைவதும் இதன் இலக்காகும்.
இந்தத் திட்டமானது, பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் விளை பொருட்களின் பெரிய அளவிலான உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது.