பசுவின் சாணம் மூலமாக உற்பத்தி செய்யப்படும் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுத் திட்டம்
August 27 , 2022 1087 days 459 0
ஹிந்துஸ்தான் பெட்ரோலியக் கழக நிறுவனமானது ராஜஸ்தானின் சாஞ்சூரில், பசுவின் சாணத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்தி ஆலையினைத் தொடங்கியது.
கழிவிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்தல் என்ற துறையின் கீழ் அந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் முதல் திட்டமாக இது இருக்கும்.
உயிரி எரிவாயு உற்பத்திக்கு நாளொன்றுக்கு 100 டன் மாட்டுச் சாணத்தை இந்த ஆலை பயன்படுத்த உள்ளது.
இதனை வாகன எரிபொருளாகப் பயன்படுத்த இயலும்.
இந்த ஆலையானது கோபர்-தன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு, ஓர் ஆண்டிற்குள் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோபர் (இயற்கையான உயிரி வேளாண் வளங்களைப் பயன்படுத்துதல்) தன் திட்டம் ஸ்வச் பாரத் இயக்கத்தின் (கிராமின்) ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டுள்ளது.