பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்
May 1 , 2023 1149 days 615 0
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், அகாலிதளத்தின் மூத்தத் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95 வயது) காலமானார்.
1970-71; 1977-80; 1997-2002 மற்றும் 2007 முதல் 2017 ஆம் ஆண்டு வரை (தொடர்ந்து இரண்டு முறை) ஆகியவை பணியாற்றிய ஆண்டுகளாக இவர் ஐந்து முறை பஞ்சாபின் முதல்வராகப் பணியாற்றியுள்ளார்.
இந்திய அரசானது இவருக்கு 2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமை விருதான பத்ம விபூஷன் விருதினை வழங்கியது.
1970 ஆம் ஆண்டில், அவர் அந்த காலக்கட்டத்தில் ஒரு இந்திய மாநிலத்தின் இளம் முதல்வர் என்ற பெருமையினைப் பெற்றார்.
முதன்முதலில் 1957 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலச் சட்டசபைக்கு உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அதன் பிறகு இவர் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.