TNPSC Thervupettagam

படைச்சிறுத்தை மீதான மேகாலயாவின் பாதுகாப்புத் திட்டம்

August 12 , 2026 21 hrs 0 min 41 0
  • மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் கே. சங்மா, படைச்சிறுத்தை பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • மாநில விலங்கான படைச்சிறுத்தையைப் (நியோஃபெலிஸ் நெபுலோசா) பாதுகாப்பதே இதன் நோக்கம்.
  • இது போர்னியோ மற்றும் சுமாத்ரா தீவுகளில் காணப்படும் சுண்டா படைச் சிறுத்தையிலிருந்து வேறுபட்டது.
  • படைச்சிறுத்தையானது, பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் "எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்" எனப் பட்டியலிடப் பட்டு உள்ளது.
  • மேலும் இது, 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை I-இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
  • பூடான், மியான்மர், தாய்லாந்து, தீபகற்ப மலேசியா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் இதன் உலகளாவிய வாழிடங்களில் அடங்கும்.
  • இதற்கு மாறாக, வங்கதேசம், வியட்நாம் மற்றும் சீனாவின் பெரும் பகுதிகளில் இதன் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது.
  • சிங்கப்பூர் மற்றும் தைவானில் இது உள்ளூரில் அழிந்துவிட்டது.
  • இந்தியாவில், இது சிக்கிம், வடக்கு மேற்கு வங்காளம், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், அசாம், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், மேகாலயாவின் மிதவெப்பமண்டல காடுகளிலும் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்