இந்திய இராணுவத்தின் தேர்வு வாரியமானது முதல்முறையாக 5 பெண் அதிகாரிகளை படைப் பிரிவு தலைமைத் தளபதி என்ற பதவிக்கு உயர்த்தியுள்ளது.
இந்த 5 பெண் அதிகாரிகளும் ஏற்கனவே 26 வருடச் சேவையை நிறைவு செய்து உள்ளனர்.
படைப்பிரிவு தலைமைத் தளபதி (கர்னல்) எனும் பதவிக்கு உயர்த்தப்பட்ட அந்த 5 பெண் அதிகாரிகள் பின்வருமாறு
மின்னணு மற்றும் இயந்திர பொறியாளர்கள் படைப்பிரிவின் துணைத்தளபதி நவ்நீத் துகால் மற்றும் துணைத் தளபதி சோனியா ஆனந்த்,
சமிக்ஞை படைப்பிரிவின் துணைத்தளபதி சங்கீதா சர்தனா, பொறியாளர்கள் படைப்பிரிவின் துணைத்தளபதி ரிச்சா சாகர் மற்றும் துணைத்தளபதி ரீனு கன்னா ஆகியோராவர்.
இதற்கு முன்பாக, இராணுவக் கல்விப் படை, இராணுவத் தலைமை சட்ட அதிகாரி மற்றும் இராணுவ மருத்துவப் படை ஆகியவற்றில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மட்டுமே படைப்பிரிவு தலைமைத் தளபதி என்ற பதவிக்கு உயர்வு அளிக்கப்பட தகுதி உடையவர்களாக அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.