TNPSC Thervupettagam

பட்டினமருதூர் தொல்லியல் தளம்

May 20 , 2026 15 hrs 0 min 77 0
  • தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால், தூத்துக்குடி கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள பட்டினமருதூர் தொல்லியல் தளத்தில் சமீபத்தில் சுமார் 1,500 தொல்பொருட்கள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டன.
  • இந்த அகழ்வாராய்ச்சியில் பழங்கால நாணயங்கள், பீங்கான் பாண்டத் துண்டுகள், சங்கு ஆபரணங்கள் மற்றும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
  • முற்கால பாண்டியர்களின் பழமையான துறைமுகமான கொற்கையைப் போலவே, பட்டினமருதூரும் ஒரு முக்கியமான கடலோர வர்த்தக மையமாக இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
  • கொற்கை, சங்க காலத்தில் முத்து குளிப்பதற்கும், ரோமானியப் பேரரசு மற்றும் தூர கிழக்கு நாடுகளுடனான வர்த்தகத்திற்கும் புகழ்பெற்றதாக இருந்தது.
  • இக்கண்டுபிடிப்புகள், இப்பகுதி பல்வேறு கலாச்சாரக் கட்டங்களையும், பழங் காலத்தில் தீவிரமான கடல்வழி வர்த்தகத்தையும் கொண்டிருந்ததைக் காட்டுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்