TNPSC Thervupettagam

பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பட்டியலில் நான்கு பழங்குடியினர் சேர்க்கை

September 20 , 2022 1026 days 515 0
  • பின்வரும் நான்கு பழங்குடியினரைப் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தின் எல்லையை ஒட்டிய கிரி என்ற பகுதியின் ஹட்டீ சமூகம்.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகம்
    • சத்தீஸ்கர் மாநிலத்தினைச் சேர்ந்த பிஞ்சியா சமூகம்
    • உத்தரப் பிரதேசத்தின் 13 மாவட்டங்களில் வசிக்கும் கோண்ட் சமூகம்
  • சத்தீஸ்கரில் உள்ள 11 பழங்குடியினர் சமூகத்தினையும், கர்நாடகாவில் உள்ள ஒரு பழங்குடியினர் சமூகத்தினையும் ஒத்தச் சொற்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.

பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அளவுருக்கள்

  • பழங்குடியினரைப் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான செயல்முறையானது அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையுடன் தொடங்குகிறது.
  • பழமையான பண்பு அடையாளங்கள், தனித்துவமான கலாச்சாரம்; புவியியல் சார்ந்து தனித்துக் காணப்படுதல், சமூகத்துடன் தொடர்பு கொள்ளத் தயங்குதல் மற்றும் பின் தங்கிய நிலை.
  • எனினும், இந்த அளவுருக்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்