உத்தரப் பிரதேசத்தில் 17 இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் பட்டியலிடப்பட்ட சாதியினராக அறிவிக்கும் உத்தரப் பிரதேச அரசின் ஒரு உத்தரவைச் சமீபத்தில், அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அரசியலமைப்பின் 341வது சட்டப்பிரிவின் விதிகளின்படி, பாராளுமன்றத்தால் உருவாக்கப் பட்ட சட்டத்தைத் தவிர, எந்தவொரு சாதியையும் அல்லது குழுவையும் ஒரு மாநிலத்தின் பட்டியலிடப்பட்ட சாதியினர் பட்டியலில் சேர்க்க முடியாது என்று அந்தநீதிமன்றம் கூறியது.
குடியரசுத் தலைவரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மாற்றத்தினைச் சட்டப் படி பாராளுமன்றத்தால் மட்டுமே மாற்றச் செய்ய முடியும் என்று 341வது சட்டப்பிரிவு கூறுகிறது.