பட்டியலிடப்பட்ட சாதியினர் & பழங்குடியினர் மற்றும் இதரப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு
September 22 , 2022 1062 days 626 0
தனது மாநில அரசு வேலைகளில் 77 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான முன் மொழிதலுக்கு ஜார்க்கண்ட் அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இது பட்டியலிடப்பட்ட சாதியினர் & பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், இதரப் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதரப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடாகும்.
அம்மாநிலம் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை தற்போது உள்ள 14 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இது உள்மாநிலப் பட்டியலிடப்பட்டச் சாதியினர் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு 12 சதவிகிதம் மற்றும் உள்மாநில பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர்ச் சமூகங்களுக்கு 28 சதவிகிதம் என்று இட ஒதுக்கீடு வழங்குகிறது.
இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 12 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இந்த மசோதாவைச் சேர்க்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.