TNPSC Thervupettagam

SC & ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு

February 13 , 2020 1968 days 604 0
  • பட்டியலிடப்பட்ட வகுப்பினர் / பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) திருத்தச் சட்டம், 2018ன் அரசியலமைப்பு செல்லுபடித் தன்மையை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
  • இந்தத் திருத்தச் சட்டமானது 2018 ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று வழங்கப்பட்ட அசல் எஸ்சி மற்றும் எஸ்டி (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கடுமையான விதிகளை நீர்த்துப் போகச் செய்யும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.
  • பின்வருவனவற்றின் அடிப்படையில் 2018 திருத்தச் சட்டத்தை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவையாவன:
    • சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை மீறுதல் (சரத்து 14) மற்றும்
    • தனிப்பட்ட (தனியுரிமை) சுதந்திரம் (சரத்து 21).

திருத்தச் சட்டம், 2018ன் முக்கிய அம்சங்கள்

  • இது அசல் சட்டத்தில் பிரிவு 18Aஐ சேர்த்துள்ளது.
    • எந்தவொரு நபருக்கும் எதிராக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதற்கு முதல்கட்ட விசாரணை தேவையில்லை என்று இது கூறுகின்றது.
  • காவல் துறையினர் குற்றவாளியைப் பிடியாணை இல்லாமல் கைது செய்து, நீதிமன்றத்திடமிருந்து அனுமதி பெறாமல் சம்பத்தப்பட்ட நபரிடம் விசாரணையைத் தொடங்கலாம்.
  • அதிக அளவு சாதிய வன்முறை நிகழும் பகுதிகளை "வன்கொடுமைக்கு உள்ளாகும்" பகுதிகளாக அறிவிக்க மாநிலங்களுக்கு இது அதிகாரங்களை வழங்குகின்றது.
  • இது எஸ்சி / எஸ்டி அல்லாத அரசு ஊழியர்களால் இந்தப் பணிகளை வேண்டுமென்றே புறக்கணித்ததற்கான தண்டனையையும் வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்