பட்டியலிடப் பட்ட சாதியினரின் இட ஒதுக்கீட்டிற்கான உள் வகைப்பாடு
August 4 , 2024 367 days 321 0
இடஒதுக்கீடு வழங்குவதற்கு பட்டியலிடப்பட்டச் சாதியினரின் உள் வகைப்பாடினை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப் படும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு ஆனது 2004 ஆம் ஆண்டு E.V.சின்னையா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசிற்கு இடையிலான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்தது.
பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான 15% இடஒதுக்கீட்டிற்குள், பிற்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் சாதியினருக்கு மற்றவர்களை விட அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதை இத்தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது.
பஞ்சாப் அரசானது 2006 ஆம் ஆண்டில் அரசு வேலை வாய்ப்புகளில் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான ஒதுக்கீட்டிற்குள் வால்மீகி மற்றும் மசாபி சீக்கியர்களுக்கு 50% இட ஒதுக்கீடு மற்றும் முதல் முன்னுரிமை வழங்கியது.