பணத்தாள்களில் இருந்து பிரிட்டிஷ் அரசர்களின் படங்களை அகற்றுதல்
February 7 , 2023 927 days 430 0
ஆஸ்திரேலிய அரசானது, தனது புதிய 5 டாலர் தாள்களில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் படம் இடம் பெறாது என்று அறிவித்துள்ளது.
அதன் புதிய 5 டாலர் தாள்களானது, மூன்றாம் சார்லஸின் படத்திற்குப் பதிலாக, உள்நாடு சார்ந்த வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.
ஆனால் தற்போது மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவம் பொறிக்கப் பட்ட நாணயங்களில் மன்னரின் படம் இடம் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த நடவடிக்கையானது, "மூதாதைய ஆஸ்திரேலியர்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றிற்கு" மதிப்பளிக்கும்.
பிரிட்டிஷ் மன்னர் ஆஸ்திரேலியாவின் அரசத் தலைவராக விளங்குகிறார் இருப்பினும் தற்போதையக் காலங்களில் இவரது பொறுப்பு பெரும்பாலும் பெயரளவு அடையாளம் என்ற அளவிலேயே உள்ளது.