பணப்பைகளுக்கிடையே (Wallet) இணைந்து செயலாற்றும் தன்மை- ரிசர்வ் வங்கி அனுமதி
October 14 , 2017 2992 days 1259 0
வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் ஆறுமாதங்களுக்குள் தங்களது பணப்பைகள் அல்லது முன்செலுத்தப்பட்ட கட்டண செலுத்து முறைகளை (Prepaid Payment instrument) ஒருங்கிணைந்த செலுத்து இடைதள வசதி (UPI-Unified Payment Interface) மூலமாக மின்னணுசார் செலுத்துமுறைகளை (Electronic Payments) இடையூறில்லாமல் மேம்படுத்தும் பொருட்டு இணைந்து செயலாற்றும் முறையை (Interperability) ஏற்படுத்த வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதன் முதற்கட்டமாக, ஒருங்கிணைந்த செலுத்து இடைதள வசதி மூலம் வாடிக்கையாளர் தகவல் நிரப்பப்பட்ட அனைத்து முன்செலுத்தப்பட்ட கட்டண செலுத்துமுறைகளும் வங்கிகளுக்குள்ளாக இணைந்து செயலாற்றும் முறையில் அமைக்கப்பட வேண்டும்.
அடுத்த கட்டத்தில், இணைந்து செயலாற்றும் முறை பணப்பைகளுக்கும் வங்கிக் கணக்குகளுக்குமிடையே ஒருங்கிணைந்த செலுத்து இடைதள வசதி மூலம் செயல்படுத்தப்பட வேண்டும்.