இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது 2016 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 மதிப்புள்ள இந்திய ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பினை உறுதி செய்துள்ளது.
2016 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் தேதியன்று, இந்தியப் பிரதமர் 500 மற்றும் 1,000 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பினை விடுத்தார்.
அதிக மதிப்புள்ள இந்த பணத்தாள்கள் செல்லாது என்ற முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பணமதிப்பிழப்பு தொடர்பான முடிவின் செல்லுபடித் தன்மையினைப் பரிசீலிக்கச் செய்வதற்காக உச்ச நீதிமன்றம் ஆனது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அரசியலமைப்பு அமர்வு ஒன்றினை அமைத்தது.
தற்போது இதற்கான முடிவு, அரசியலமைப்பு அமர்வின் 4:1 என்ற பெரும்பான்மையின் மூலம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.